2ஜி வழக்கு: மத்திய அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

திங்கள், 12 மார்ச் 2012 (23:11 IST)
FILE
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட பலருக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் மத்திய அமைச்சகத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதும் புகார் எழுப்பப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு மேல் உள்ள அலைக்கற்றைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் அப்படி வசூலிக்கப்படாத இணைப்புகளை ரத்து செய்யுமாறு வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் எஸ்.ஜே.முகோபத்யாய் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் 8 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இன்று நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டது.

இந்த மனுவினை குறித்து பதிலளிக்க மத்திய நிதித்துறை, தொலைத்தொடர்பு துறை, ட்ராய் அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தது. இதேபோல் ரிலையன்ஸ், ஐடியா, லூப், ஸ்பைஸ், ஏர்டெல், வோடபோன், டாடா மற்றும் ஏர்செல் ஆகிய 8 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

English Summary: In a case filed by Lawer Prasanth Bhushan, Supreme Court Issues notice to Central Govt Ministry and to several telecom companies.

வெப்துனியாவைப் படிக்கவும்