2ஜி வழக்கு: ஜேபிசி முன்பு ஆஜராக பால்வா விருப்பம்

புதன், 1 ஜூன் 2011 (18:50 IST)
2ஜி ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத் தலைவர் ஷாகித் பால்வா,நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராக விருப்பம் தெரிவித்துள்ளார்.

தன்னை விசாரணைக்காக அழைக்கக்கோரி, 2ஜி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தாம் விசாரணையில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதால் என்னை ஜேபிசி முன்பு ஆஜர்படுத்த அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில் பால்வா குறிப்பிட்டுள்ளார்.

ஷாகித் பால்வாவின் இந்த முடிவு 2ஜி விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்