சீக்கியர் படுகொலை குறித்து மீண்டும் விசாரணை: சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கிறது மத்திய அரசு?

ஞாயிறு, 1 பிப்ரவரி 2015 (15:52 IST)
1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கிய படுகைலை தொடர்பான வழக்கில் மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை அமைக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
கடந்த 1984ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இது தொடர்பான விசாரணை காவல்துறையினரால் முடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சீக்கிய கலவரம் தொடர்பான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டெல்லி சட்டமன்றத் தேர்தலை அடுத்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
மேலும், இந்தப் புலனாய்வு குழுவில் இடம்பெறுபவர்கள் அடுத்த மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.பி. மாத்தூர் தலைமையிலான கமிட்டி, 225 வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
 
இதையடுத்து சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைக்க உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்