இந்தியாவில் அழிவின் விளிம்பில் 192 மொழிகள் உள்ளதாம்...

வியாழன், 28 மே 2015 (19:30 IST)
இந்தியாவில் வழக்கில் உள்ள மொழிகளில் 192 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

 
உலகில் அழியும் மொழிகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் உலகில் பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் மொழிகளில் சுமார் 2 ஆயிரத்து 500 மொழிகள் அழியும் தருவாயில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளில் 196 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளது.
 
இந்தியாவிற்கு அடுத்த நிலையில் 192 மொழிகள் அழியும் தருவாயில் அமெரிக்கா உள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தோனேசியா உள்ளது. இந்தோனேசியாவில் 147 மொழிகள் ஆபத்தில் உள்ளது என யுனோஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்