ஒரே வீட்டில் சிக்கிய 186 பாம்புகள்

புதன், 11 மே 2016 (16:24 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரே வீட்டில் 186 பாம்புகள் பிடிப்பட்டுள்ளது.


 

 
ஜிதேந்திர மிஸ்ரா என்பவர் ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர், அவரும் அவரது குடும்பத்தினரும் பாஜியா என்னும் பகுதியில் வாழகின்றனர். அவரது வீட்டில் ஞாயிறு இரவு அன்று தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது சத்தம் கேட்டு எழுந்துள்ளார்.
 
அப்போது  இரண்டு பாம்புகள் ஜோடியாக அறையின் ஒரு மூலையில் சுருண்டுக் கிடந்ததை பார்த்தவுடன், வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைத்து அந்த இரண்டு பாம்புகளையும் பெட்டிக்குள் அடைக்கும் முயற்ச்சில் ஈடுப்படும் போதும்  சிறிது நேரத்தில் நிறைய பாம்புகள் அறைக்கு வர தொடாங்கியது. 
 
உடனே மிஸ்ரா தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வெளியேறி இரவு முழுவதும் தனது பக்கத்து வீட்டில் தங்கியுள்ளார். 
 
இதையடுத்து மிஸ்ரா காலையில் பாம்பு பிடிப்பவரை அழைத்து வந்து தனது வீட்டில் இருந்த பாம்புகளை பிடித்து நதியருகே விட்டார். அதில் மொத்தம் 186 பாம்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
    

வெப்துனியாவைப் படிக்கவும்