அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நிலையில், அம்மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்கு சில தனி நபர்களும், குழுக்களும் போராட்டம் நடத்தி அமைதியைச் சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின்படி, மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என்று போலீஸ் கமிஷனர் பரா கூறியுள்ளார்.
மேலும், அசாமில் 2 நாள் பயணமாக வருகை தரும் அமைச்சர் அமிஷ் ஷா, அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 45 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கவுள்ளார். அத்துடன், தேசிய தடவியல் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.