இளம்பெண் உயிரிழந்த உபி கிராமம் சீல் வைப்பு: 144 தடையும் அமல்!

வெள்ளி, 2 அக்டோபர் 2020 (08:55 IST)
இளம்பெண் உயிரிழந்த உபி கிராமம் சீல் வைப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஹாத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது 4 கயவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு 15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
இறந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினர் தகனம் செய்ததாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி உள்பட இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மறைந்த இளம்பெண்ணின் பெற்றோர்களை நேற்று சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதும், அவர்கள் இருவர் மீதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ராஸ் கிராமத்திற்கு மேலும் சில அரசியல்வாதிகள் செல்ல வாய்ப்பு இருப்பதாக வெளி வந்துள்ள தகவலை அடுத்து அந்த கிராமத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் உயிரிழந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதும் காயம் காரணமாக மட்டுமே அவர் உயிரிழந்தார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்