14 நாள் நீதிமன்றக் காவலில் மாதுரி குப்தா

சனி, 1 மே 2010 (12:35 IST)
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட இந்தியத் தூதரக அதிகாரி மாதுரி குப்தாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகி‌‌‌‌ஸ்தானின் இஸ்லாபாத்தில் உள்ள இந்தியத் தூதரத்தில் பணிபுரிந்தவர் மாதுரி குப்தா. இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு அளிக்க ரகசிய தகவல்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், காவல்துறை விசாரணை முடிந்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் மாதுரி குப்தா. மேலும் 2 நாட்கள் விசாரணைக் காவலில் அனுமதிக்க காவல் துறையினர் நீதிமன்றத்தில் கோரினர்.

காவல் துறையின் கோரிக்கையை நிராகரித்த டெல்லி நீதிமன்றம், மாதுரி குப்தாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்