12ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்திற்குள் 80 சதவீத படிப்பறிவை எட்டிவிடுவோம்: ஸ்மிரிதி இரானி

திங்கள், 7 டிசம்பர் 2015 (08:09 IST)
12 ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை இந்தியா எட்டிவிடும் என்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார். 


 

 
இது குறித்து ஸ்மிரிதி இரானி கூறுகையில், "இந்தியாவில் 1951 ஆம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது.

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது நாட்டில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை 72.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலை நீடித்தால் வரும் 12 ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம் எட்டிவிடுவோம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்