நான்கு ஆண்டுகளில் மர்மமான முறையில் இறந்த 11 அணு விஞ்ஞானிகள்

வியாழன், 8 அக்டோபர் 2015 (17:07 IST)
சமீபத்தில் அணுசக்தித் துறை அளித்துள்ள தகவலில் 11 அணு விஞ்ஞானிகள் 2009-13 காலத்தில் நாட்டில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையத் துறையில் பணிபுரிந்த 8 விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குண்டு வெடிப்பு அல்லது தூக்கிலிட்டு அல்லது கடலில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செப்டம்பர் 21 தேதி ஹரியானாவை சேர்ந்த ராகுல் செஹ்ரவட்டுக்கு அளித்த தகவலில் மூன்று அணுமின் கழக விஞ்ஞானிகள் பணி நேரத்தில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

பாபா அணுசக்தி ஆய்வு மையத்தை உள்ள சி குரூப் விஞ்ஞானிகள் இரண்டு பேர் தங்கள் வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் 2010 மற்றும் 2012 ஆண்டுகளில் நடந்துள்ளது. நீண்ட கால உடல்நல குறைவினால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக இதில் ஒரு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு தம்பே அணுசக்தி ஆய்வு மையத்தில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் இறந்துள்ளனர். முமபையில் உள்ள எஃப் கிரேட் விஞ்ஞானி ஒருவர் அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தெளிவில்லாமல் முடித்து வைக்கப்பட்டன.

கல்பாக்கத்தில் 2013 ஆம் ஆண்டு விஞ்ஞானி ஒருவர் கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளர். கர்நாடகா கலி ஆற்றில் குதித்து விஞ்ஞானி ஒருவர் குதித்து தற்கொலை செய்துள்ளார் இந்த வழக்கும் தனிப்பட்ட காரணம் என்று முடித்து வைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்