1000 குழந்தைகள் மரணம் ...அதானி மருத்துவமனையின் மீது குற்றச்சாட்டு...

வியாழன், 21 பிப்ரவரி 2019 (17:41 IST)
நாட்டில் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் அதானி. குஜராத்தில் அவரது தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் கடந்த 5 வருடங்களில் சுமார் 1000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் சட்டப் பேரவையில் நேற்றைய தினத்தில் மருத்துவமனைகளில் குழந்தைகள் மரணம் அடைவதை குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக துணைமுதல்வர் நிதின் பட்டேல் ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளர். அதில் குஜராத்தில் குட்ச் என்ற இடத்தில் தொழிலதிபர் அதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் ஜிகே என்னும் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இவ்வறிக்கையில் குழந்தைகள் மரணம் குறித்து அரசு ஆய்வு குழுஒன்றை அமைத்து விசாரணை செய்தது. ஆனால் அதில் அரசு வகுத்த நெறிமுறைகளின் படிதான் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரியவந்தது. ஆயினும் இத்தனை குழந்தைகள் எப்படி இறந்தனர் என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்