கட்டுமானத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீ்ட்டுக்கு அனுமதி

வியாழன், 30 அக்டோபர் 2014 (08:42 IST)
கட்டுமானம் மற்றும் மனை வணிகத் துறையில் அந்நிய நேரடி முதலீ்ட்டிற்கான விதிமுறைகளைத் தளர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு, தடையின்றி அனுமதிக்கப்படும்.
 
திட்டம் அறிவிக்கப் பட்டதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் குறைந்தபட்சம் 50 லட்சம் டாலர் முதலீடு செய்யப்பட வேண்டும்.
 
கட்டுமானத்தின் பரப்பளவும் 50 ஆயிரம் சதுர மீட்டரிலிருந்து 20 ஆயிரம் சதுர மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்