காவிரி விவகாரம்; துப்பாக்கி சூடு; தலைக்கு ரூ.10 லட்சம்

புதன், 14 செப்டம்பர் 2016 (15:35 IST)
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைப்பெற்ற கலவரத்தில் காவல்துறையினர் வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


 
காவிரி பிரச்சனையில் கர்நாடகா மாநிலத்தில் வன்முறை வெடித்தது. பெங்களூரு நகரில் பதற்ற நிலை காணப்பட்டது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை மீறி காவல்துறை வாகனத்தை தீயிட்டு எரிக்க முயன்றனர்.
 
அப்போது காவல் துறையினர் வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் மூன்று பேர் குண்டு அடிப்பட்டு காயமடைந்தனர். அவர்களில் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
 
இறந்தவர் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி வழக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்