பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய எலி: அரசு மருத்துவமனையின் அவலம்

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (14:01 IST)
பிறந்து பத்தே நாட்கள் ஆன குழந்தையை எலி கடித்துக் கொன்றது. இச்சம்பவம் நடந்த ஆந்திரப் பிரதேச மருத்துவமனைக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே ஸ்ரீனிவாஸ் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டுள்ளார் மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமணையில் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த பிறந்து பத்தே நாளான குழந்தை எலி கடித்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் முகம் மற்றும் உடல் பகுதியில் எலி கடித்த காயங்கள் காணப்பட்டன. ஆந்திரப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே ஸ்ரீனிவாஸ் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவமனையிடம் அறிக்கை கேட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வேணுகோபால் கூறினார்.

விஜயவாடா பொது மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி லக்‌ஷ்மி என்ற பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது பின்னர் அந்த குழந்தை உடல் நலம் தொடர்பான பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சைக்காக குண்டூர் மருத்துவமனைக்கு அந்த குழந்தை கொண்டுவரப்படது என டாக்டர் வேணுகோபால் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்