10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிசீலனை

வியாழன், 25 ஜூன் 2009 (15:17 IST)
நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அத்துறையின் அமைச்சர் கபில்சிபல் கூறியிருக்கிறார்.

10ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதற்கான யோசனையை அமைச்சர் முன் வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்வு அடிப்படையிலான கல்வித் திட்டம், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் அவசர சிகிச்சைக்கான ஆதாரம் போன்று அமைந்து விடுவதாக கபில்சிபல் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

11 மற்றும் 12ஆம் வகுப்பை மாணவர்கள் தொடரும்பட்சத்தில், தேர்வுக்குப் பதிலாக மாற்று கல்வி முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வும் தேவையற்றது என்று அவர் கூறினார்.

என்றாலும் இதுகுறித்த இறுதி முடிவு எடுப்பதற்கு முன் மாநில கல்வி வாரியங்களின் ஆலோசனை பெறப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளிகளுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்