" லைலா" புயல்: தமிழகம், ஆந்திராவில் கன மழை பெய்ய வாய்ப்பு

செவ்வாய், 18 மே 2010 (13:31 IST)
வ‌ங்க‌க்கட‌லி‌ல் மைய‌ம் கொ‌ண்ட குறை‌ந்த கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ‌நிலை புய‌லாக உருவெடுத்துள்ளதால் வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ‌ங்க‌க்கட‌லி‌ல் மைய‌ம் கொ‌ண்ட குறை‌ந்த கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ‌நிலை புய‌ல் சின்னமாக உருவெடுத்துள்ளது எ‌ன்றும், செ‌ன்னை‌‌க்கு தெ‌ன்‌கிழ‌க்கே 700 ‌கி.மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் புய‌ல் மைய‌ம் கொ‌ண்டு‌ள்ளது எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

கடலோர‌ப் பகு‌தி‌க‌ளி‌ல் ம‌ணி‌க்கு 45 முத‌ல் 50 ‌கி.‌‌மீ‌ட்ட‌ர் வரை கா‌ற்று ‌வீச‌‌க்கூடு‌ம் எ‌ன்று‌ம், இதனா‌ல் ‌மீனவ‌ர்க‌ள் கடலு‌க்கு செ‌ல்ல வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை விடு‌த்து‌ள்ளது.

"லைலா" எ‌‌ன்று பெய‌ர் சூ‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள இந்த புய‌ல் காரணமாக வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்