வெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம் - சோனியா காந்தி
வெள்ளி, 16 மே 2014 (18:54 IST)
தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது குறித்து சோனியாகாந்தி வெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து சோனியா காந்தி கூறுகையில், ‘வெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம்.
மக்களின் தீர்ப்பை
பணிவன்புடன் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் முக்கிய கொள்கையில் சமரசம் இல்லை’ என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த தேர்தலை சந்தித்தாலும் அந்த கட்சி பெரும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், தோல்வி குறித்து ராகுல் காந்தி, கட்சியின் துணைத்தலைவர் என்ற முறையில் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.