வெங்காயம் கேட்டவரை அடித்து உதைத்த ஹோட்டால் ஊழியர்கள்

செவ்வாய், 3 டிசம்பர் 2013 (18:59 IST)
மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வெங்காயம் கேட்ட வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்து மருத்துவமனைக்கு அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FILE

தெற்கு மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிபவர் மயூர் பிராடி ஜாதவ். 23 வயதாகும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஷாலிமார் உணவகத்திற்கு சென்று தேவையான உணவை ஆர்டர் செய்தனர்.

அவர்களுக்கு உணவுடன் ஒரு பிளேட் வெங்காயம் மட்டும் கொடுக்கப்பட்டது. அது போதவில்லை என்பதால் மேலும் வெங்காயம் கொண்டு வருமாறு ஜாதவ் வெயிட்டரிடம் தெரிவித்தார்.

வெகு நேரமாகியும் வெங்காயம் வராததால் ஜாதவ் வெயிட்டரிடம் மீண்டும் வெங்காயத்தை எடுத்து வருமாறு கேட்டார். அதற்கு வெயிட்டர் வெங்காய விலை அதிகரித்துவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கு ஜாதவ் வெங்காய விலை குறைந்துவிட்டது என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மற்றொரு வெயிட்டர் வந்து ஜாதவின் சட்டையை பிடிக்க மற்றொருவர் உணவகத்தில் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு ஷட்டரை மூடினார்.

பின்னர் வெயிட்டர்கள் ஜாதவை தாக்கினர். ஒரு வெயிட்டர் ஜாதவ் மீது டம்ப்ளரை வீசியதில், அது ஜாதவின் கண் அருகே பட்டு ரத்தம் கொட்டியது.

இதையடுத்து ஜாதவ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் உணவக மேலாளர் மற்றும் வெயிட்டரை கைது செய்தது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த ஜாதவ், நான் அமைதியாக பேசிக்கொண்டிருந்தபோதே அவர்கள் என்னை தாக்க துவங்கினர். இதை தடுக்க முயன்ற எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் அவர்கள் தாக்க முயன்றனர். என்மீது அவர்கள் வீசிய டம்பளரினால் ஏற்பட்ட காயத்திற்கு 12 தையல்கள் போடவேண்டியதாயிற்று என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்