விப்ரோ, இன்ஃபோசிஸ் நிறுவனங்களுக்கு மே.வங்கம் அழைப்பு

வியாழன், 17 செப்டம்பர் 2009 (19:01 IST)
தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி வகிக்கும் விப்ரோ, இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் தங்கள் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியான ரஜார்ஹட்டில் மையங்களை அமைக்க வருமாறும், அதற்காக தலா 45 ஏக்கம் நிலம் அளிக்கப்படும் என்றும் மேற்கு வங்க மாநில அரசு கூறியுள்ளது.

கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா இத்தகவலைத் தெரிவித்தார்.

நிலத்தை கையகப்படுத்த அந்த நிறுவனங்கள் உடனடியாக முன்வர வேண்டும் என்றும், அந்த இடத்தில் புதிய ஐ.டி மையங்களை அமைக்க வேண்டும் என்றும் புத்ததேவ் கேட்டுக் கொண்டார்.

2 ஆண்டுகளில் இந்த இரு நிறுவனங்களும் 16 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இதற்காக அமைச்சர்களுடன் தாம் பேச்சு நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்