வதந்தியால் 8 பேர் ரயிலில் அடிபட்டு பலி- ஆந்திராவில் பயங்கரம்!

ஞாயிறு, 3 நவம்பர் 2013 (14:59 IST)
FILE
பொகாரோ விரைவு ரெயிலில் ஒரு பெட்டி தீப்பிடித்துவிட்டது என்று வதந்தி பரவ அலறியடித்த பயணிகள் சிலர் ரயில் செயினைப் பிடித்து இழுத்து நிறுத்த்தி இறங்கிச் செல்ல முயன்றபோது பக்கத்து பாதையில் வந்த ரெயில் மோதி 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கோட்லாம் ரயில் நிலையம் அருகே இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

ஆலப்புழை-தன்பாத் பொகாரோ விரைவு ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அடுத்த பாலத்தில் வந்த ராயகாடா - விஜயவாடா பாசஞ்சர் ரயில் அடிப்பட்டு இறந்தனர். நேற்று மாலை 6.50 மணிக்கு பொகாரோ விரைவு ரெயிலின் ஒரு பெட்டி தீப்பிடித்தது என்ற வதந்தி பரவியது.

உடனடியாக பயந்த மக்கள் செயினை பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தினர். கோட்லாம் ரெயில் நிலையம் அருகே வண்டி நின்றது. அப்போது ஒரு பெட்டியிலிருந்த 8 பேர் ரயிலிலிருந்து குதிக்க அடுத்த டிராக்கில் வந்த ரயிலில் அடிபட்டு இறந்தனர். இருட்டாக இருந்ததால் பக்கத்து லைனில் வண்டி வருவது தெரியவில்லை.

விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்