லோக்பால் மசோதா: பாபா ராம்தேவ் பல்டி

புதன், 1 ஜூன் 2011 (19:50 IST)
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவின் விசாரணை எல்லைக்குள் பிரதமரையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் கொண்டுவரக் கூடாது என்று நேற்று எதிர்ப்பு தெரிவித்த பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், தான் அவ்வாறு கூறவில்லை என இன்று விளக்கம் அளித்துள்ளார்.

ஊழலை ஒழிக்க வலியுறுத்தி ஜூன் 4 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த ராம்தேவ், இன்று டெல்லி வந்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவின் விசாரணை எல்லைக்குள் பிரதமரையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் கொண்டுவரக் கூடாது என்று தாம் கூறவில்லை என்றார்.

இந்நிலையில், டெல்லி வந்த பாபா ராம்தேவை மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் உள்ளிட்டோர் விமான நிலையத்ததில் சந்தித்துப் பேசினர்.

அப்போது உண்ணாவிரதம் இருக்கும் திட்டத்தை ராம்தேவ் கைவிட வேண்டும் என்று அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்துவிட்ட அவர், திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்