லோக்பால் மசோதா நகலை எரிப்பு: ஹசாரேவுக்கு கபில் சிபல் கண்டனம்

வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (19:41 IST)
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவின் நகலை எரிப்பது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அண்ணா ஹசாரேவுக்கு மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் நீதித் துறையினருக்கு விலக்கு அளித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மற்றும் அவரது அதரவாளர்கள் இன்று அம்மசோதாவின் நகல்களை எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்த செயல் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று கண்டனம் தெரிவித்தார்.

அரசு கொண்டுவந்துள்ள மசோதா மீது ஹசாரேவுக்கு மாற்று கருத்து இருக்குமானால், அது தொடர்பான அவரது கருத்துக்களை நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும், அந்தக் குழு அதுகுறித்து பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்