லிபியா மீது தாக்குதல்- இந்தியா கண்டனம்

திங்கள், 21 மார்ச் 2011 (10:59 IST)
லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐநா சபை தீர்மானத்தின்படி லிபியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவப் படையினர் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

மேலும் லிபியாவில் வன்முறை தொடர்வதற்கும் மனிதாபிமான சூழ்நிலை சீர்குலைந்து வருவதற்கும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது என்றும்

விமான தாக்குதல், அங்குள்ள அப்பாவி பொது மக்கள், வெளிநாட்டுக்காரர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்தியா நம்புகிறது எனவும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்