ராம்தேவ் உடல்நிலை மோசமடைந்தது

புதன், 8 ஜூன் 2011 (16:44 IST)
ஹரித்வாரில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் பாபா ராம்தேவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியுள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவரவும், ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி,டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பாபா ராம்தேவ், அங்கிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்தப்படார்.

இருப்பினும் அவர் தமது கோரிக்கையை வலியுறுத்தி ஹரித்வாரில் தொடர்ந்து 5 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியுள்ளது.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் திரவம் அருந்துமாறும், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.ஆனாலும் அவர் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து, எடையும் குறையத் தொடக்கி உள்ளது. மேலும் நீர்ச்சத்து குறைவாலும் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஹரித்வாரின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் யோகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்