ராஜினாமாவை ஏற்கக் கோரி தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் வழக்கு

புதன், 27 ஜனவரி 2010 (15:53 IST)
தங்களது ராஜினாமாவை ஆந்திர சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 139 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தனித் தெலுங்கானா கோரி கட்சி வேறுபாடு இன்று தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 139 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்தாண்டு டிசம்பர் 10ஆம் தேதி ஆந்திர அவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார்.

மீண்டும் டிசம்பர் 23ஆம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அதையும் அவைத் தலைவர் ஏற்கவில்லை. இதையடுத்து தங்களின் ராஜினாமாவை ஏற்கும்படி அவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி தெலுங்கானாவைச் சேர்ந்த 139 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் வந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்