ராகிங்கை தடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு

வெள்ளி, 8 மே 2009 (16:42 IST)
புதுடெல்லி: கல்லூரிகளிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் ராகிங் கொடுமையை முற்றிலும் ஒழிப்பதற்காக மாநில அரசுகள் குழுக்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கல்வி நிறுவனங்களில் இருந்து ராகிங்கை முற்றிலுமாக ஒழிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரிஜித் பசாயத் தலைமையிலான நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் ஆல்கஹாலுக்கு அடிமையாகி இருந்தால், அவற்றில் இருந்து அவர்களை மீட்கவும் கல்வி நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு உளவியல் வல்லுனரை நியமிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராகிங்கை ஒழிப்பதற்கு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்