ரன்பீர் கொலை: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

புதன், 8 ஜூலை 2009 (19:12 IST)
உத்ராகண்ட் மாநிலத்தில் எம்.பி.ஏ மாணவர் தவறுதலாக என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த வெள்ளியன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினருக்கு எதிராக காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரன்பீர் சிங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் நெருக்கடி ஏற்பட்டதால், மாநில அரசு சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரைத்திருப்பதாக தலைமைச் செயலாளர் ஐ.கே. பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு ஏற்கனவே மாநில குற்றப்புலனாய்வுக் கழக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

காஸியாபாத்தைச் சேர்ந்த 22 வயது மாணவரான ரன்பீர் சிங் காவல்துறை துணை ஆய்வாளரின் துப்பாக்கியை பறித்து விட்டு நிற்காமல் சென்றதாகக் கூறி உத்ராகண்ட் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

ஆனால், பிரேத பரிசோதனையின்போது, அவரை அருகில் இருந்தே காவல்துறையினர் சுட்டு இருப்பதாகத் தெரிய வந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்