ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்கா‌வி‌ட்டா‌ல் வழ‌க்கு - மல்லையா மகனு‌க்கு அமெ‌ரி‌க்க பெ‌ண் நோட்டீஸ்

சனி, 19 மே 2012 (13:50 IST)
FILE
த‌ன் ‌மீது அவதூறு பர‌ப்‌பிய ‌விஜ‌ய் ம‌ல்லையா மக‌ன் ‌சி‌த்தா‌ர்‌த் ம‌ல்லையா 24 ம‌‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ள் ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்கா‌வி‌ட்டா‌ல் வழ‌க்கு தொடர‌ப்படு‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா பெ‌ண் வ‌க்‌கீ‌ல் நோ‌ட்டீ‌‌ஸ் அனு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

டெ‌ல்ல‌ி‌‌யில‌் உ‌ள்ள நட்சத்திர ஓட்டலில் அமெரிக்கப் பெண் சொஹை‌ல் ஹ‌மீ‌திட‌ம் தவறாக நடக்க முயன்றதாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைச் சேர்ந்த ஆஸ்‌ட்ரேலிய வீரர் லூக் போமர்ஸ்பக் நே‌ற்று கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நிறுவனரில் ஒருவரான சித்தார்த் மல்லையா ட்விட்டர் இணைய தளத்தில் சொஹை‌ல் பற்றித் தவறாகக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளார்.

இதைக் கண்டித்து, சித்தார்த் மல்லையா ட்விட்டரில் வெளியிட்ட கருத்துக்கு நிபந்தனை இல்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்கப் பெண் சொஹைல் ஹமீது, தனது வக்கீல் ஜிதேந்தர் கார்க் மூலம் வ‌க்‌‌கீ‌ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அ‌தி‌ல், 24 ‌ம‌ணி நேர‌த்த‌ி‌ற்கு‌ள் ‌சி‌த்தா‌ர்‌த் ‌ம‌ல்லையா மன்னிப்பு கேட்கத் தவறினால், அவ‌ர் மீது வழக்கு தொடரப்படும் என்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்