மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி: தொழில் அதிபர் கைது

வியாழன், 16 ஜூலை 2009 (10:26 IST)
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி செய்துவந்த டெல்லி தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் இருந்து ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு சரக்குப் பெட்டகம் ஒன்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 60 மோட்டோரோலா வயர்லெஸ் கருவிகள், 60 நவீன ரேடியோ வயர்லெஸ் கருவிகள், 60 சார்ஜர்கள், 54 பேட்டரி செட், 10 டிரான்சிஸ்டர்கள், 2 ஒர்ல்ட் பேண்ட் ரிசீவர், 6 மைக்ரோ கேசட் ரெக்கார்டர்கள் மற்றும் குண்டு துளைக்காத கவச ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட நவீன கருவிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த கருவிகளை நரேஷ் சர்மா என்ற தொழிலதிபர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக நரேஷ் சர்மாவை கைது செய்த காவல்துறையினர், அவர் கொடுத்த தகவலின் பேரில் பிரபல ஆயுத வியாபாரியான பிரவீன் சர்மா என்பவரையும் பிடித்தனர். இவர்கள் இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்