மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் யார் என்று முடிவு

சனி, 2 ஜூலை 2011 (12:56 IST)
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சி.வி.சி.) யாரை நியமிப்பது என்பது குறித்து பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று இறுதி செய்தது. அவர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

புதிய சி.வி.சி. யார் என்பதை மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பி.ஜே. தாமஸ் பணி நியமனத்தை 4 மாதங்களுக்கு முன்னர், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரதீப்குமாதான் புதிய ஊழல் கண்காணிப்புத் தலைவர் என்று ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டு வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்