மதானிக்கு பிணை: நீதிபதிகளிடையே மோதல்

புதன், 4 மே 2011 (17:34 IST)
மதானிக்கு பிணை வழங்குவது தொடர்பாக நீதிபதிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானி, கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தாக்கல் செய்த பிணை மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

ஆனால் 2 நீதிபதிகளிடையே, மதானிக்கு பிணை வழங்குவது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது பிணை மனுவை தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பரிந்துரை செய்தது.

மதானிக்கு பிணை வழங்க மார்க்கண்டேய கட்ஜு ஆதரவு தெரிவித்த நிலையில், தேசப் பாதுகாப்பை சீர்குலைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளதாகக் கூறி, பிணை வழங்க நீதிபதி மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்