பொறுமை இழந்து பக்தர்கள் திருப்பதியில் ஆர்பாட்டம்

திங்கள், 25 மார்ச் 2013 (13:34 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் நிலவியது, வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் டிக்கெட் வாங்குபோது திடீரென கம்ப்யூட்டரில் கோளாறு ஏற்பட்டதால் பக்தர்கள் பொருமை இழந்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் 3 மணி வரை பாத யாத்திரையாக வந்த 4,300 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணி வரை டிக்கெட் வழங்காததால் பொறுமை இழந்த பக்தர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில் ஊழியர்களுடன் தகராறு செய்தனர்.

நேற்று காலை 6 மணி முதல் 3 மணி வரை பாத யாத்திரையாக வந்த 4,300 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணி வரை டிக்கெட் வழங்காததால் பொறுமை இழந்த பக்தர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில் ஊழியர்களுடன் தகராறு செய்தனர்.

அதன் பின்பு டிக்கெட் வழங்கும் கம்யூட்டரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் வரிசையில் நின்ற பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

தரிசனம் செய்ய அவர்களுக்கு 7 மணி நேரம் ஆனது. தர்ம தரிசனம் செய்ய 19 மணி நேரம் பக்தர்கள் காத்து நின்றனர். பக்தர்கள் கூட்டத்தால் 300 ரூபாய் கட்டணம் நிறுத்தப்பட்டது. முடி காணிக்கை செய்ய பக்தர்கள் 3 கிலோ மிட்டர் தூரம் வரிசையில் நின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்