பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை: மத்திய அரசு

Webdunia

செவ்வாய், 3 ஜூலை 2007 (20:23 IST)
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.

சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிகை விடுத்துள்ளது.

இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூயும், டீசல் லிட்டருகு 1 ரூயும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த கோரும் எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கை குறித்து அடுத்த வாரம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறினார்.

சர்வ தேச சந்தயில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டிம் ரூ.50.000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்