பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு வாபஸ் இல்லை: பிரணாப்

செவ்வாய், 4 மே 2010 (19:43 IST)
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார்.

மாநிலங்களவையில் நிதி மசோதா மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில் இதனை தெரிவித்த பிரணாப், தற்போதைய நிதி நிலைமையில் விலை குறைப்பு சாத்தியமில்லை என்றார்.

" மன்னியுங்கள்.தற்போது நிலைமை மிகவும் கடினமாக உள்ளதால், விலை குறைப்பு சாத்தியமில்லை. நல்ல காலத்திற்காக காத்திருப்போம்" என்று அவர் மேலும் கூறினார்.

2010 - 11 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வாகன எரிபொருள் மீதான சுங்க மற்றும் கலால் வரியை ரூ.26,000 கோடிக்கு உயர்த்தினார் பிரணாப்.

இதனால் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.71 ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.55 ம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்