பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வன்முறை: காவலர் பலி

வெள்ளி, 2 மார்ச் 2012 (19:55 IST)
பெங்களூரு நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியபோது ஏற்பட்ட வன்முறைக்கு போலீசார் ஒருவர் பலியானார்.

சுரங்க ஊழல் முறைகேடுகளுக்காக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பெங்களூரூ சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் ஜனார்தன ரெட்டி மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.இதனையொட்டி ரெட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார்.

இது தொடர்பான குறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் வந்திருந்த நிலையில், அவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஊடகத்தினர் தவறாக சித்தரிப்பதாகவும், நீதிமன்றத்துக்குள் நுழைய அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கறிஞர்கள் வன்முறையில் இறங்கினர்.இந்த மோதலின்போது காவலர் ஒருவர் காயமடைந்து, பின்னர் உயிரிழந்தார்.

இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.வி. சதானந்த கவுடா உறுதியளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்