புதுடெல்லியில் இருந்து தாய்லாந்து புறப்பட்டார் ஹில்லாரி

செவ்வாய், 21 ஜூலை 2009 (15:49 IST)
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், இந்தியாவில் தமது 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று புதுடெல்லியில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

தாய்லாந்தின் புகேட் நகரில் நடைபெறும் ஆசியான் மண்டல அமைப்பு (ARF) கூட்டத்தில் ஹில்லாரி கலந்து கொள்கிறார்.

மும்பையில் கடந்த ஆண்டு தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஹோட்டலில் தங்கியதுடன், வர்த்தகத் துறை தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரைச் சந்தித்து ஹில்லாரி பேச்சுகள் நடத்தினார்.

பாதுகாப்புத் துறை உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களிலும் ஹில்லாரி கையெழுத்திட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்