பீகாரில் பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

வியாழன், 20 செப்டம்பர் 2012 (12:00 IST)
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுபாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு போன்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் இன்று நடத்துகின்றன.

இதனால் நாட்டின் பல பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பீகாரில் பாட்னா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் பாரதீய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ரெயில் போக்குவரத்து, பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதானல் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பீகாரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநில உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்