பீகாரிகள் மீது வன்மம் காட்டும் ராஜ்தாக்கரேயின் குடும்பத்தினரே பீகாரிலிருந்து வந்தவர்களே!

சனி, 1 செப்டம்பர் 2012 (15:48 IST)
தாக்கரேவின் குடும்பத்தினரே பீகாரிலிருந்து வெளியேறி, மேற்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள தர் என்ற பகுதியில் சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு, பின்னர் மும்பையில் குடியேறியவர்கள்தான் என்று காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் பதிலடி கொடுய்த்துள்ளார்.

மும்பை நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, மகாராஷ்டிராவில் தங்கியுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார். அவரது கருத்து இன்று பல்வேறு அரசியல் கட்சியினரிடையே பலத்த கண்டனத்தைப் பெற்றுள்ளது.

"மும்பை ஒரு மீனவர்களின் நகரமே, மற்றவர்களெல்லாலும் வந்தேறிகளே என்று கூறியுள்ளார் திக்விஜய் சிங்.

பீகார் ஆளும் ஐக்கிய ஜனதாதள் கட்சியைச் சேர்ந்த ஷிவானந் திவாரி ராஜ் தாக்கரே மீது கடுமையாக பாய்ந்துள்ளார். மகாராஷ்டிரா ஆளும் கட்சி மற்றும் மத்திய காங்கிரஸ் ஆகியவை ராஜ்தாக்கரேயை வளர்த்து விடுகின்றனர். இவரை வளர்த்து விடுவது பஞ்சாபில் பிந்தரன்வாலேயை வளர்த்து விட்டதை நினைவூட்டுகிறது என்றார்.

"ராஜ்தாக்கரே என்பவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒரு பெரிய சவால். தாக்கரே அங்கு அரசை விட தன்னை பெரியவராகக் காட்டி வருகிறார்" என்றார்.

மும்பை போலீஸ்காரர்கள் பீகாரில் ஒருவரை கைது செய்தனர். ஆனால் அதனை பீகார் போலீஸில் தெரிவிக்கவில்லை, மேலும் பீகார் கோர்ட்டில் அவரை நிறுத்தி அனுமதி பெற்ற பிறகே அயல் மாநில போலீஸ் குறிப்பிட்ட நபரை கூட்டிச் செல்ல முடியும். இதனால் மும்பை போலீஸ் மீது பீகார் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்தவுடன் ராஜ்தாக்கரே பீகாரிகளை வெளியேற்றுவோம் என்று கூறினார்.

இந்தப் பின்னணியிலேயே தற்போது சர்ச்சை நிகழ்ந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்