பிரதமர் பற்றி சஞ்சய் பாரு உண்மையைத்தான் கூறி இருக்கிறார் - நரேந்திர மோடி பாராட்டு

புதன், 16 ஏப்ரல் 2014 (14:08 IST)
பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடகத்துறை ஆலோசகர் சஞ்சய் பாரு எழுதிய ‘சந்தர்ப்பவசமாக வந்த பிரதமர்‘ என்ற புத்தகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது ஆட்சியில் சோனியா காந்திதான் பிரதமராக செயல்பட்டார் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், ‘சஞ்சய் பாருவின் புத்தகத்தால் பிரதமரின் குடும்பம் மிகுந்த கோபம் கொண்டுள்ளது. மன்மோகன் சிங்கின் மூத்த மகள், சஞ்சய் பாரு முதுகில் கத்தியால் குத்தி விட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
சஞ்சய் பாரு கூறிய உண்மைகளை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனினும் அவர்கள் இதனை பொது விஷயமாக கொண்டு வந்திருப்பது சரியல்ல. நான் முன்பு இந்த உண்மையைச் சொன்னேன். ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே (சஞ்சய் பாரு) உண்மையை கூறியிருக்கிறார்கள். சஞ்சய் பாரு தனது புத்தகத்தில் உண்மையான தகவல்களைத்தான் தெரிவித்துள்ளார்‘ என்று மோடி பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்