பா.ஜ. கூட்டணிக்கு 233 இடங்கள் கிடைக்கும் - புதிய கருத்துக் கணிப்பு

ஞாயிறு, 30 மார்ச் 2014 (11:46 IST)
ஏ.பி.பி. செய்திக்காக ஏ.சி. நீல்சன் நடத்திய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு வரும் லோக்சபா தேர்தலில் 233 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கூட்டணிக்கு 119 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
 
பாரதீய ஜனதா தனித்து 209 இடங்களையும் காங்கிரஸ் தனித்து 91 இடங்களையும் கைப்பற்றும்.
 
திரிணாமுல் காங்கிரஸ்– 28, இடது சாரிகள்–23, அ.தி.மு.க.–21, பகுஜன் சமாஜ்–18, பிஜூ ஜனதா தளம்–17 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
பாரதீய ஜனதா கூட்டணிக்கு ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, குஜராத் போன்ற மேற்கு மாநிலங்களில் தான் அதிக இடங்கள் கிடைக்கும். இங்குள்ள 116 தொகுதிகளில் 86 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும்..
Narendra modi
வடக்கு மாநிலங்களில் 151 தொகுதிகளில் 87 தொகுதிகள் பா.ஜனதா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

தென் மாநிலங்களில் பாரதீய ஜனதாவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் மொத்த உள்ள 134 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 35 தொகுதியிலும், பாரதீய ஜனதா கூட்டணி 21 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தென் மாநிலங்களில் காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் இல்லாத மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மொத்தம் உள்ள 142 தொகுதிகளில் மாநில கட்சிகள் 71 இடங்களை கைப்பற்றும், பாரதீய ஜனதா கூட்டணிக்கு 39 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 32 இடங்களும் தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்