பாலியல் புகாரில் சிக்கிய தருண் தேஜ்பாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

செவ்வாய், 18 பிப்ரவரி 2014 (12:56 IST)
FILE
டெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் அவருடன் பணிபுரிந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதற்காக கைது செய்யபட்டார். இவ்வழக்கு தொடர்பாக அவர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

டெஹல்கா பத்திரிகை ஆசிரியரும், நிறுவனருமான தருண் தேஜ்பால், அதே பத்திரிகையில் பணியாற்றும் பெண் நிருபர் ஒருவரை கடந்த நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக பாதிக்கபட்ட பெண் நிருபர் கோவா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நவம்பர் 30 ஆம் தேதி தருண் தேஜ்பாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தருண் தேஜ்பால் மீது நேற்று 2 ஆயிரத்து 684 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தருண் தேஜ்பாலுக்கு எதிராக கண்கானிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காணொளிகள் மற்றும் சாட்சியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தருண் தேஜ்பாலில் ஜாமீன் மனு மீதான விசாரணை, மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா பெஞ்ச் விசாரித்தது. இதில், மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்