பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கேரள மாநிலம் - மோடி

செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (14:05 IST)
காவி அணிந்து கொண்டு, மதத்தின் பெயரால் அப்பாவி முஸ்லீம்களையும், கிருஸ்துவர்களையும் ஆயிரக்கணக்கில் கொல்வதும், மாலேகான் உள்ளிட்ட இடங்களில் குண்டு வைப்பதும் மிகச்சிறந்த ஆன்மீகப் பணியா என்று சாதாரண மக்கள் கூட கேட்கிறார்கள். இதற்கு என்ன பதில்?
Narendra Modi
நாடாளுமன்றத்துக்கு 9 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக அசாம், திரிபுராவில் உள்ள 6 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
 
முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த அன்றுதான் பாரதீய ஜனதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மறுதினமான இன்று நரேந்திர மோடி கேரளா, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
 
கேரள மாநிலம் காசர்கோட்டில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:–
 
கேரள மீனவர்களை இத்தாலி கடற்படையினர் சுட்டுக்கொன்றனர். இதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கேள்விக்கு பாதுகாப்பு துறை அமைச்சரும், பிரதமரும் பதில் அளிக்கவில்லை.
மேலும்..

கேரளாவில் எல்.டி.எப்.புக்கும், யு.டி.எப்புக்கும் இடையில் எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. இதனால்தான் கேரளா முன்னேற்றம் அடையாமல் மோசமான நிலையில் உள்ளது.
 
கேரளாவில் உள்ள இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அறிவு திறன் அதிகம் கொண்ட இந்த இளைஞர்கள் இங்கிருந்து வெளியேறுவது துரதிருஷ்டவசமாகும். வெளிநாடுகளில் வாழும் கேரள இளைஞர்கள் பல்வேறு அவதிக்கு ஆளாகின்றனர்.
 
மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் கேரளாவைச் சேர்ந்தவர் வெளிநாட்டில் உள்ள கேரள இளைஞர்களுக்கு உதவவில்லை. விரைவில் இங்கு நல்லது நடக்கும்.
 
கேரளா முன்பு சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக இருந்தது. தற்போது பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது. இவ்வாறு மொடி பேசினார்.
 
இவர் பயங்கரவாதிகள் என்று கம்யூனிஸ்ட்களை குறிப்பிடுகிறாரா? இருந்துவிட்டுப் போகட்டும். காவி அணிந்து கொண்டு கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் அப்பாவி முஸ்லீம்களையும், கிருஸ்துவர்களையும் ஆயிரக்கணக்கில் கொல்வதும், மக்கா மஸ்ஜித், மாலேகான், சம்சுதாபாத் எக்ஸ்பிரஸ் ஆகிய இடங்களில் குண்டு வைத்து மக்களை மொத்தமாக கொல்வதும் மிகச் சிறந்த ஆன்மீகப் பணியா என்று சாதாரண மக்கள் கூட கேட்கிறார்கள். இதற்கு என்ன பதில்?

வெப்துனியாவைப் படிக்கவும்