பயங்கரவாதம், தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்

திங்கள், 1 பிப்ரவரி 2010 (13:32 IST)
பயங்கரவாதம், தீவிரவாதத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது ஒவ்வொரு மாநில அரசுகளின் கடமை என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று துவங்கிய 2 நாள் முதல்வர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர், “சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதே மாநில அரசுகளின் முதன்மைக் கடமையாகும். அதோடு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அமைதியான, சமுதாய இணக்கமுள்ள சூழலையும் ஏற்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு குறைபாடுகளைக் களையும் வண்ணம் சட்டம், ஒழுங்க நடவடிக்கைகள் இருக்க வேண்டும். பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

பாதுகாப்பை மேம்படுத்த உள்ளூர் செயல்பாடுகளை மட்டும் அறிந்து கொண்டால் போதாது. தேசிய, சர்வதேச அளவிலான நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள வேண்டும” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்