பன்றிக் காய்ச்சல்: இந்தியாவில் 1927 பேர் பாதிப்பு

திங்கள், 17 ஆகஸ்ட் 2009 (20:28 IST)
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1927 ஆக உயர்ந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 6ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் 1 லட்சத்து 77 ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,462 பேர் பலியாகியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நோய்க்கு தமிழகம் உள்பட இந்தியாவில் 28 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1927 ஆக உயர்ந்துள்ளது. இதில் 703 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்