பதவி போனால் சிங்கமும் எறும்புதான்! வி.கே.சிங்கிற்கு நோட்டீஸ்!

வெள்ளி, 1 ஜூன் 2012 (14:48 IST)
FILE
ராணுவத்துக்கு டாட்ரா வாகனம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் தனக்கு லஞ்சம் தர முற்பட்டதாகவும் முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி அது இன்னமும் ஓயாத நிலையில் வி.கே.சிங் ஓய்வு பெற்றார்.

பதவியில் இருந்த வரை பேசாமல் இருந்த பி.இ.எம்.எல். நிறுவனத்தின் வி.ஆர்.எஸ். நடராஜன், தற்போது வாகனம் வாங்குவதில் ஊழல் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளதோடு, வி.கே.சிங்கிற்கு நோட்டீஸ் வேறு அனுப்பியுள்ளார்.

"பி.,இ.எம்.எல்&லுக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் முன்னாள் ராணுவ தளபதி. வி.கே.சிங் இந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் என்ற முறையில், எங்கள் நிறுவனத்தின்மீது பொய்யான மற்றும் களங்கம் கற்பிக்கும் வகையில் குற்றம்சாட்டிய முன்னாள் ராணுவ தளபதி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வக்கீல நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்" என்று கூறினார் நடராஜன்.

தளபதி வி.கே.,சிங் பொறுப்பில் இருந்த போது இந்திய ராணுவத்திற்கு வாகனம் வாங்கியதில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும், என்னிடம் தரமில்லாத வாகனங்களை வாங்கிட ரூ. 14 கோடி பேரம் பேசப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் இரு அவைகளிலும் பெரும் புயலை கிளப்பியது. ஏற்கனவே ஓய்வு பெறுவதில் வயது சர்ச்சை காரணமாக சுப்ரீம் கோர்ட் இவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை. மேலும் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் லீக்கானது, இதுவும் பெரும் பிரச்னையை கிளப்பியது. இதனால் மத்திய அரசு பெரும் தலைவலிக்கு உள்ளானது.

இந்நிலையில் பதவியை இழந்த தளபதிக்கு மத்திய அரசின் பொதுநிறுவன பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நெருக்கடி கொடுக்க துவங்கியிருக்கிறது.

வி.கே.சிங் தனது குற்றிற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லையேல் மான நஷ்ட வழக்கு தொடருவோம் என்று கூறியுள்ளார் நடராஜன்.

வெப்துனியாவைப் படிக்கவும்