பதவி உயர்வில் இட ஒதுக்கீடு - அரசு ஒப்புதல்- விரைவில் மசோதா

செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (12:57 IST)
அரசுப் பணிகளில் பதவி உயர்வின்‌போது, எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்திற்கு மத்திய அ‌மைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சில நாட்களில் இந்த மசோதா லோக்சபாவில் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமாஜ்வாடி கட்சி இந்த மசோதா திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இந்த பதவி உயர்வு இட ஒதுக்கீட்டிற்குள் வருமாறு செய்யப்படும் என்று முயாலம் சிங்கிற்கு மத்திய அரசு உத்திரவாதம் அளித்துள்ளது.

தலித்துகளுக்கு பதவி உயர்வில் இதன் மூலம் நன்மை கிட்டும் என்று பகுஜன் சமாஜ்வாடி கட்சி இந்த மசோதா திருத்தத்திற்கு பலத்த வரவேற்பு அளித்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மக்களவையில் அமளி ஏற்பட்டு வரும் நிலையில் பிரதமர் பதவி விலக பாஜக கடுமைஅயக வலியுறுத்தி வரும் நிலையில் இந்த பதவி உயர்வு இட ஒடுக்கீடு ஆயுதத்தை அரசு கையிலெடுத்துள்ளது.

ஆனாலும் இந்த மசோதா நீதித் துறையின் ஆய்வுக்குப் பிறகே முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்