நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன்-கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. கடிதம்

புதன், 4 ஏப்ரல் 2012 (13:04 IST)
FILE
ஒடிசா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினாஹிகாகா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார் பேச்சு வார்த்தைகளில் எந்த வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் தான் பதவியை ராஜினாமா செய்வதாக ஒடிசா முதவருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

இத்தாலி சுற்றுலா பயணிகள் 2 பேரை கடத்திய மாவோயிஸ்டுகள் அவர்களில் ஒருவரை சில நாட்களில் விடுதலை செய்து விட்டனர். ஆனால் எம்.எல்.ஏ. கடத்தப்பட்டு 12 நாட்கள் கடந்தும் இன்னும் அவர் மீட்கப்பட வில்லை.

இந்த நிலையில் தங்களது சகாக்களை விடுவிக்கவும் தங்கள் மீதான நடவடிக்கைகளை நிறுத்தவும் மாவோயிஸ்ட்கள் ஏப்ரல் 5ஆம் தேதி வரை கெடு நிர்ணயித்துள்ளனர்.

கொரபுட் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் எம்.எல்.ஏ.வை பணய கைதியாக பிடித்து வைத்துள்ளனர். சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் தலைவரை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விடுத்துள்ளனர். அரசு தரப்பிலும், மாவோயிஸ்ட்டுகள் தரப்பிலும் தனித்தனியே நடுநிலையாளர்கள் நியமிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால் முன்னேற்றம் ஏற்படவில்லை.

மாவோயிஸ்டுகள் தரப்பில் இருந்து ஆடியோ டேப் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. 2011-ல் மால்கங்கிரி கலெக்டர் வினீல்கிருஷ்ணா கடத்தப்பட்ட போது அரசு அளித்த வாக்குறுதி நிறை வேற்றப்படவில்லை. எனவே இப்போது கோரிக்கையை முழுமையாக நிறை வேற்றினால் தான் எம்.எல்.ஏ. வையும் இத்தாலி சுற்றுலாப் பயணியையும் விடுவிப்போம் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் தாழ்த்தப்பட்ட மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன். என்னை மீட்பதில் அரசு அக்கறை காட்டவில்லை. மாவோயிஸ்டுகள் நிபந்தனைப்படி தவறான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்து விடுங்கள். நான் என்னால் முடிந்த வரை தொகுதி மக்களுக்கு சேவை செய்து இருக்கிறேன்.

நான் ஆளுங்கட்சியில் இருந்தும் என்னை புறக்கணிக்கிறீர்கள். தேவைப்பட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தை தொடர்ந்து மீண்டும் பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். மாவோயிஸ்ட்டுகள் நிபந்தனைப்படி சிலரை விடுதலை செய்வது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. எனவே மாவாயிஸ்ட்டுகள் 5-ந் தேதி வரை விதித்துள்ள கெடுவை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று நவீன்பட் நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News Summary: In a Letter to Odisha CM Patnaik, Abducted MLA said that Governmet is negligent because he belongs to the Tribal Community.

வெப்துனியாவைப் படிக்கவும்