நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை துவக்கம்

புதன், 1 ஜூலை 2009 (11:40 IST)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளது. இதில் மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டு மசோதாவை நிரைவேற்ற காங்கிரஸ் கட்சி கடுமையாக முயற்சிக்கும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்ற பின்னர் நாளை துவங்க உள்ள முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து 3ஆம் தேதி, ரயில்வே நிதிநிலை அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்ய உள்ளார்.

புதிய ரயில்வே நிதிநிலை அறிக்கையில், பயணிகள் கட்டணத்தில் மாற்றம் உள்ளிட்ட சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்ய உள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் கூட்டணி அரசு முயற்சி எடுக்கும்.

ஆனால் இதற்கு ஒரு சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இதனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. எனவே நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதங்கள் நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்