நாடாளுமன்றம் முடக்கம்: அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி

திங்கள், 22 நவம்பர் 2010 (15:23 IST)
நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது குறித்து இன்று மதியம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்வு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை, இன்று தொடர்ந்து 7 வது நாளாக முடக்கினர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பைக் கோருவதற்காகவும், அது தொடர்பான தீர்வை எட்டுவதற்காகவும், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மதியம் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி மதியம் நடந்த கூட்டத்தில், ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள், பா.ஜனதா, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நீண்ட நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது குறித்த தீர்வு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்