நாடாளுமன்றத் தேர்தல் : 80 தொகுதிகள் முடிவு - மார்க்சிஸ்ட்!

ஞாயிறு, 15 பிப்ரவரி 2009 (12:46 IST)
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகளில் 80 தொகுதிகளை முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம், பிரகாஷ் காரத் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள தொகுதிகளில் 80 தொகுதிகளை முடிவு செய்துள்ளோம். கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து மேலும் சில தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் பற்றி முடிவு செய்ய மார்ச் 7, 8 ஆம் தேதிகளில் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று கூறிய காரத், திங்கட்கிழமை தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில், அதிக வேலைவாய்ப்பு உள்ள தொழில்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்